இன்று இடம்பெற்ற கோர விபத்து: 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
[2025-05-01 21:28:03] Views:[93] இன்று ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்புக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகநேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.