54வது பிறந்தநாளைக் கொண்டாடும் அஜித் குமார்.
[2025-05-01 21:55:45] Views:[100] தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் தான் தல அஜித் குமார். தனது நடிப்பால் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையாலும் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவராவார்.
இன்று மே 1ம் திகதி உலகளாவிய ரீதியில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நாளாக இருந்தாலும் இந்த நாளில் தான் அஜித் குமாரின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது.
தனது 54வது பிறந்த நாளை கொண்டாடும் அஜித்திற்கு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பலர் அவரது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதுடன் சிலர் அவருக்காக மரக்கன்றுகள் நடுதல், இலவச உணவளிப்பு போன்ற சேவைச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.