yarlathirady.com

யாழில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு..!

[2025-05-02 09:48:53] Views:[185]

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி காணி விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் அவர்களினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சி.சுதீஸ்னர் மற்றும் பருத்தித்துறை பிரதேதச செயலாளர் திரு.சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்படி விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்கள்.
01.தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில்: காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 15.13 ஏக்கர் அளவிலான மாங்கொல்லை எனும் கிராமம் விடுவிப்பு. இதன்மூலம் காங்கேசன்துறை மேற்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
02.வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 20 ஏக்கர்அளவிலான ஒட்டகப்புலம் கிராமம் விடுவிப்பு.
03.பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 5.57 ஏக்கர்அளவிலான கற்கோவளம் கிராமம் விடுவிப்பு.

இன்றைய தினம் அப் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடி தொடர்பான பரிசீலனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்படிற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்பட்ட காணிகளுக்குரிய உரிமையாளர்கள் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் காணி அறிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.