இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..!
[2025-05-02 11:00:43] Views:[105] நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை காலமும் யாழ்பாண மாவட்டத்தில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக 4 வன்முறை சம்பங்களும், 90 சட்ட விரோத மீறலும் இடம்பெற்றுள்ளதுடன் அவை தொடர்பில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன எனவும் அவை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேலும்அவர் தெரிவித்துள்ளார்.