அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை விரைவில்.
[2025-05-03 10:47:36] Views:[102] தற்போது நம்நாட்டில் பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு வேறு எந்த தரப்பினருக்கும் அனுப்பப்படாத உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயலாக்கப்படவுள்ளது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டையாக இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.