இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்..!!
[2025-05-03 21:52:31] Views:[107] உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் இன்று (03.05.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதி காலம் நிலவும் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வாக்களிக்க சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.