yarlathirady.com

கோடை வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் இளநீர் சர்பத் செய்வது எப்படி..!

[2025-05-04 10:34:44] Views:[75]

வெப்பநிலையை சமாளிப்பதற்கு உடலை நீர் சத்துக்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக கோடை வெயில் காலம் ஆரம்பமாகி மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளது.

அந்த வகையில் கோடைகால உணவுகள் மற்றும் தர்பூசணி, இளநீர் மோர் நுங்கு போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் குறிப்பாக வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தொன்றாகும். அது வெயிலின் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய இயற்கை நீர். ”வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் பாரியளவு உதவி புரிகிறது.

உடலுக்குத் தேவையான பொட்டாசியம், சோடியம், கல்சியம் போன்றவற்றின் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளநீர் சர்பத் செய்யும் முறை.

முதலில் இளநீர் தண்ணீர் மற்றும் அதில் உள்ள வழுக்கை பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் இளநீர் தண்ணீர், வழுக்கை, ஊறவைத்த சப்ஜா விதைகள் மற்றும் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலந்தால் இளநீர் சர்பத் தயாராகி விடும்.

இளநீர் போலவே சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்க வல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்
2025-05-18 10:41:08
தக் லைஃப் படத்தின் டிரைலர் வந்துள்ளது.
மாமன் படம்
2025-05-18 10:32:01
இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மகாராஜா 2
2025-05-14 19:38:15
இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:44:59
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:43:02
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.