வியட்நாமிற்கு விஜயம் மேட்கொண்ட ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு...!!
[2025-05-04 15:24:29] Views:[126] வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் , இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை அமோக வரவேற்றனர்.