வீட்டின் கூரை மேல் முச்சக்கர வண்டி- இருவர் காயம்
[2025-05-04 18:47:07] Views:[150] முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது.
அரநாயக்க-மாவனெல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வீட்டின் கூரையின் மேல் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.