அம்மை, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2025-05-06 11:48:40] Views:[83] நாட்டில் அம்மை, டெங்கு மற்றும் இன்ஃப்ளூவன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் நுழம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஏடிஸ் எஜிப்டி நுழம்பு இனத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் அதிக காய்ச்சல், மூட்டு வலி, தோல் கருமையாக மாறுதல் மற்றும் சொறி போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.
இதற்கிடையில், இந்த நாட்களில் இன்ஃப்ளூவன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் இருமல், காய்ச்சல் அல்லது சளி இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று நோய்களின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மூலம் நோய்களை அடையாளம் காணமுடியும்
இந்த மூன்று நோய்களில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆளாகியிருந்தால், உடனடியாக தகுதிவாய்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.