சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா..?
[2025-05-07 19:47:53] Views:[92] பீட்சா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான படம் ரெட்ரோ.
இந்த படத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளது, ஆக்ஷன் காட்சிகள் மூலம் சூர்யா தன்னை ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்.
70 கோடி ருபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 6 நாட்களில் மொத்தமாக படம் ரூ. 86 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி ரெட்ரோ படம் வெற்றிநடை போடுகிறது.