போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட IPL போட்டி...!!
[2025-05-09 09:07:16] Views:[81] இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதும் 58ஆவது போட்டி தரம்ஷாலா மைதானத்தில் நேற்று இரவு 7.30க்கு துவங்கப்பட்டது.
இருப்பினும் இப்போட்டியானது இடைநடுவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றநிலை காரணமாக குறித்த போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தரம்ஷாலா மைதானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.