இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்..!!
[2025-05-11 11:03:17] Views:[33] நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் கொத்மலை-கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேட்படி விபத்தில் சிக்குண்டு 8பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பேருந்தே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.