மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
[2025-05-12 19:00:02] Views:[53] கண்டி - கடுகண்ணாவை ,எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நேற்று (11) இரவு 10.00 மணியளவில்இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீப்பரவலை தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ள நிலையில் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.