இன்று 20 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை
[2025-05-12 19:06:29] Views:[55] இன்று (12) வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.