உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்குத் தெரிவாகியுள்ள இணுவில் பகுதியை சேர்ந்த சிறுமி!
[2025-05-14 18:38:08] Views:[140] யாழ். இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி 2025 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.