மகாராஜா 2
[2025-05-14 19:38:15] Views:[63] மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. உலகளவில் இப்படத்திற்கு கவனம் கிடைத்தது. உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.
அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிக் பாஸ் சாச்சனா விஜய் சேதுபதியின் மகளாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.