கொட்டப்போகும் கனமழை
[2025-05-19 19:17:29] Views:[117] அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (19) குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலைமை நாடு முழுவதும் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது. இதன் தாக்கத்தால், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை இன்று (19) மற்றும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.