yarlathirady.com

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

[2025-05-20 10:38:20] Views:[68]

கடந்த நாட்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் விரைவான சரிவு ஏற்பட்டபோதிலும், விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 15 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, உலக தங்கத்தின் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், இதனுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் தங்கச் சந்தையின் விலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதியளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வரி ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் காரணமாக ஒரு அவுண்ஸ் தங்கத்திற்கு சுமார் 200 டொலர் சரிவு ஏற்பட்டதனை காணக்கூடிதாக இருந்தது. எனினும் அது தற்காலிக சரிவாக காணப்பட்ட நிலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்க இருப்பினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையினால் தங்கத்தின் விலைகள் அதிகரிப்பதற்கு மாத்திரமே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையுமா என்பதனை கூற முடியாது என தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்
2025-05-18 10:41:08
தக் லைஃப் படத்தின் டிரைலர் வந்துள்ளது.
மாமன் படம்
2025-05-18 10:32:01
இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மகாராஜா 2
2025-05-14 19:38:15
இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:44:59
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:43:02
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.