போதை மாத்திரைகளுடன் இருவர் கைது.!
[2025-05-23 22:04:44] Views:[102] யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் இன்றையதினம் (23) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க வர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 270 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.