நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!! தலைதூக்கும் பயங்கரமான நோய்கள்!!!
[2025-05-25 20:22:37] Views:[117] காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து பிரதியமைச்சர் அமைச்சர் கூறுகையில், 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.