A9 வீதியில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி!
[2025-05-26 13:10:15] Views:[137] இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் A9 வீதி ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார்ர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.