பல நூறு ட்ரோன்களால் ஒரே இரவில் உக்ரைனை தாக்கிய ரஷ்யா..!
[2025-05-28 10:48:44] Views:[135] உக்ரைன் மீது ஒரே இரவில் 300 க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு (26) ரஷ்யா 355 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ட்ரோன் தாக்குதலுக்கு முதல் நாள் ரஷ்யா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது.
அதற்கு முந்தைய நாள் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக கூரப்படுகிறது.