yarlathirady.com

போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!

[2025-05-29 20:15:55] Views:[111]

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதிக்கு 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்க வில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரை பொலிஸார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை குறித்த யுவதி போதைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையுடன், யுவதியை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் (27) செவ்வாய்க்கிழமை முற்படுத்திய வேளை, யுவதியை எதிர்வரும் 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.