பெருந்தொகையான போதைப்பொருளுடன் இத்தாலி பிரஜை கைது!
[2025-05-30 21:55:18] Views:[92] கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், குறித்த கொக்கைன் தொகை மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலி நாட்டை சேரந்தவராவார் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.