அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்கள் திருட்டு.! 6 கலசங்களுடன் ஒருவர் கைது!
[2025-06-02 11:29:33] Views:[119] யாழ்ப்பாணம், அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐயனார் கோவிலில் இருந்து பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தில் ஒருவரை கைது செய்தனர்.
சந்தேநபரை பொலிஸ் தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 06 பித்தளை கலசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.