யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி.!
[2025-06-02 21:21:52] Views:[103] யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையில்தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு வழங்கியுள்ளது.
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.