சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு.!
[2025-06-03 12:33:11] Views:[90] சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மேலும் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.99 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.88 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.52 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.