இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்:
[2025-06-03 20:31:30] Views:[94] இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
மின்சார சபையின் தலைவராக பணியாற்றிய டி.ஜே.டி. சியம்பலாபிட்டிய கடந்த மே மதம் 11ஆம் திகதி குறித்த தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.
அவரின் இராஜிநாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.