இரத்தக்கறைகளுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!
[2025-06-04 16:19:37] Views:[112] வவுனியா - காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரார் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் (24 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த குடும்பஸ்தரின்சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த குடும்பஸ்தர் நேற்றயதினம் மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.