கிரீமியா பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!
[2025-06-05 12:29:55] Views:[105] ரஷ்யாவையும் கிரிமியன் தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை பாலத்தில் சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னால் தாங்கள் இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை உரிமை கோரியது.
நீருக்கடியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி சாலை மற்றும் தொடருந்துப் பிரிவுகள் இரண்டையும் தாக்கியதாகவும், பாலத்தின் நீருக்கடியில் உள்ள தூண்களில் ஒன்றில் 1,000 கிலோகிராம் வெடிபொருட்களை பொருத்தி வெடிக்கச் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் பாதுகாப்பு சேவைவெளியிட்ட காட்சிகளில், நீருக்கடியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைக் காட்டியது. மேலும் பாலத்தின் பக்கவாட்டில் வெளிப்படையான சேதத்தைக் காட்டும் ஒரு நிலையான படமும் இருந்தது. இருப்பினும், சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை.