பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சீனப் பெண் கைது!
[2025-06-05 16:18:44] Views:[96] நிதி மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாக கூறி 1.5 மில்லியன் ரூபாய் பணத்தையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறி 191,600 ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக குறித்த சீனப் பெண்ணுக்கு எதிராக இரண்டு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு மோசடி புலனாய்வு பணியக அதிகாரிகள், சந்தேகநபரான 54 வயதுடைய சீனப் பெண்ணை நேற்று கைது செய்தனர்.
சந்தேகநபரான அந்தப் பெண் கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான், ஜூன் 11 ஆம் திகதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.