ஆட்சியமைப்பது தொடர்பில் EPDP - ITAK இடையில் விஷேட சந்திப்பு.!
[2025-06-05 19:58:39] Views:[93] உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (05) மாலை யாழ். நகரில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி கட்சி தலைமை அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு நேரில் வந்த தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தாவைச் சந்தித்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேரியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் நேரில் வந்து தம்மை சந்தித்து ஆதரவை வழங்குமாறு விடுத்துள்ள கேரிக்கை தொடர்பில் ஈ.பி.டி.பி பரிசீலிப்பதாக அதன் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.