yarlathirady.com

பிரான்ஸை வீழ்த்தியது ஸ்பெயின்!

[2025-06-06 12:45:58] Views:[95]

நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.

MHPA Arena மைதானத்தில் நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் கோல் அடிக்க, அடுத்த 3 நிமிடங்களில் சக வீரர் மைக்கேல் மெரினோ 25வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது.

எனினும் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் வேகமெடுத்தது. ஸ்பெயின் வீரர் Lamine Yamal பெனால்டி வாய்ப்பில் 54வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே சக வீரர் Pedri கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து பிரான்ஸின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே Kylian Mbappe, 59வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோல் அடித்தார்.

பின்னர் யமல் 67வது நிமிடத்திலும், ரயன் செர்கி (பிரான்ஸ்) 79வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி விவியன் Own Goal அடிக்க, பிரான்ஸ் கணக்கில் 3வது கோலாக உயர்ந்தது.

90 நிமிடங்கள் வரை ஸ்பெயின் அணி 5 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. இதனால் கூடுதல் நேரத்தில் 3 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிரான்ஸ் சிக்கிக் கொண்டது.

ஆனாலும், 90+3 நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு முயானி மூலம் ஒரு கோல் மட்டுமே கிடைத்தது. இதனால் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வருகிற 9ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்பாக 8ஆம் திகதி மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.