செனட்டர் பொ.நாகலிங்கத்தின் சிலை திறப்பு வைப்பு.!
[2025-06-08 11:20:32] Views:[83] சுன்னாகத்தின் முன்னணி தலைவரும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை நேற்று (07) சனிக்கிழமை சுன்னாகம் பிரதேச சபை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், உடுவில் பிரதேச செயலர் பா.ஜெயகரன், சுன்னாகம் பிரதேச சபைச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.