வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ போதைப் பொருள்.! சுற்றிவளைத்த பொலிஸார்:
[2025-06-09 16:16:58] Views:[90] வவுனியாவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, கதிரவேலு பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளதுடன், 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்த குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.