வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆண் தாதி.!
[2025-06-09 17:25:24] Views:[124] கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி முகம் கழுவுவதற்காக சென்ற போது, அதே வைத்தியசாலையில் பணியாற்றும் 48 வயது மதிக்கத்தக்க ஆண் தாதி கட்டிப்பிடித்து உறவு கொள்ள முனைந்தமை வைத்தியசாலையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது;
புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி சிகிச்சைக்காக கோப்பாய் பிரதேச வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முகம் கழுவுவதற்காக வைத்திய சாலையில் குளியலறைப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அந்த சமயம் குறித்த விடுதியில் தங்கி இருந்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த தாதி பின்னால் சென்று சிறுமியை கட்டிப்பிடித்து அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன், குறித்த விடயம் தொடர்பில் யாருக்கும் சொல்லக்கூடாது என அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார், பின்னர் சிறுமியின் உறவினர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.