யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கிலம்.!
[2025-06-09 17:36:40] Views:[117] யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இன்றையதினம் காலை 09.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.