யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!
[2025-06-11 10:49:12] Views:[95] யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் இன்று (11) நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை - மாவடிச்சேனை பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய சுலைமான் லெப்பை என்பவர் பொத்தானையிலுள்ள தனது இருப்பிடத்தில் இருக்கும் போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாமாற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.