வெற்றிக்கோப்பையை கைப்பற்றிய ரொனால்டோ காதலியுடன்.:
[2025-06-11 11:58:53] Views:[124] போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று பதிவிட்ட புகைப்படம் 83 மில்லியன் பார்வைகளை கடந்தது.
தேசிய லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி ஸ்பெயின் அணியுடன் மோதியது.
இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அதன் பின்னர் பெனால்டிஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
அதில் போர்த்துக்கல் அணி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இரண்டாவது முறையாக போர்த்துக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனைத் தொடர்ந்து, ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுடன் சேர்ந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுத்தார்.