சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவரின் விளக்கமறியல் நீடிப்பு..!
[2025-06-11 19:02:09] Views:[97] யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக போலியான தகவல்களை, சட்டத்தரணியின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த சமூக வலைத்தள கணக்கு உரிமையாளர் கயந்த 08ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் 09ஆம் திகதி திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவரை இன்றைய தினம் (11) புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.