யாழில் கரை ஒதுங்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மூலப்பொருள்.!
[2025-06-12 11:34:28] Views:[115] யாழ்ப்பாணத்தில் கடற்கரையோர பகுதிகளில் சூழலுக்கும், மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருள் பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கடற்கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்கள் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புங்குடுதீவு தெற்கு, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும், மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. அத்துடன் துகள்களை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2025.06.09 ஆம் திகதி கொழும்பிலில் இருந்து மும்பை நோக்கி பயணித்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஒன்று கேரள மாநிலம் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.