யாழில் விசேட அதிரடிப் படையினரால் வெடிமருந்து மீட்பு!
[2025-06-12 20:03:12] Views:[97] யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட வெடிமருந்துகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.