வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது.
[2025-06-13 11:56:35] Views:[108] வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு நேற்றைய தினம் (12) வியாழக்கிழமை ஆலய உற்சவ குருமணியிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது.
எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று 14ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை 09ஆம் திகதி காலை நடைபெறும், மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
மகோற்சவ காலங்களில் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள், பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதுடன், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர், சாரணர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்து.