முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைத் தொகுதியில் தீ பரவல்..!
[2025-06-16 11:47:00] Views:[116] முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படை பிரிவு இல்லாமையினால் உடனடி நடவடிக்கையாக படையினரின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியிருந்தது.
இந்நிலையில் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் வேகத்தினால் தீப் பரவல் அதிகரித்துள்ளதாகவும், பல இலக்கம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.