yarlathirady.com

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை!

[2025-06-16 12:55:17] Views:[90]

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூசை வழுபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான பாதயாத்திரை சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு சென்று அங்கு விசேட வழிபாடுகள், சந்நிதியான் ஆச்சிரம உபசரணைகள், உதவிகளுடன் கருத்துரைகள் என்பன இடம் பெற்றதை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

குறித்த பாதயாத்திரையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து இளைஞர்கள் இணைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்து இளைஞர்கள் இணைந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர்கள் சேவைகள் மன்ற பணிப்பாளர் வினோதினி சிறிமோகன் தலமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் வடக்கு மாகாண இளைஞர்கள் சேவை மன்ற பணிப்பாளர் ஜெமினி சந்திரசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு யாத்திரிகர்களை வழியனுப்பிவைத்தார்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.