இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
[2025-06-16 13:21:14] Views:[123] யாழ்ப்பாணம், வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்று மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படை இணைந்து நேற்று அதிகாலை வடமராட்சி கிழக்கு, பொலிகண்டி கடற்கரை பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா 220 கிலோகிராம் கஞ்சாவுடன் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பனவற்றை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.