புதிய யாழ் மாநகர முதல்வர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு :
[2025-06-16 19:20:28] Views:[81] யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (16) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் அவர் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்த நிலையில், யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.