பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினை மக்கள் தினமும் வழிபட அனுமதி..!
[2025-06-16 20:13:14] Views:[111] மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்றைய தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், அனுமதிக்கப்பட்ட நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, இராணுவ அதிகாரி உள்ளிட்டகலந்து பொது மக்கள் என பலரும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.