யாழில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது.!
[2025-06-17 11:49:16] Views:[97] யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , 19 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், இளைஞனிடம் இருந்து 11 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.